அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த ஒரு இரவு விருந்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் போரை முடித்து விட்டுத் திரும்பும்போது அமெரிக்க கடற்படை கியூபாவைக் கைப்பற்றும் என நகைச்சுவையாகக் கூறினார். ஈரானில் போரிடும் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நாடு திரும்பும் வழியில் கியூபா நாட்டின் கடற்கரைக்கு அருகே நின்றாலே போதும் என்றார். அந்த பிரமாண்ட கப்பலைப் பார்த்தவுடனேயே கியூபா அரசாங்கம், “மிக்க நன்றி, நாங்கள் சரணடைகிறோம்” என்று கூறிவிடும் என அவர் கிண்டலாகப் பேசினார்.
மேலும் அவர், “முதலில் ஒரு வேலையை (ஈரான் போர்) முடிப்போம், எனக்கு ஒரு வேலையை முழுமையாக முடிப்பதுதான் பிடிக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இதே நாளில் கியூபா மீது எரிசக்தி மற்றும் ராணுவ ரீதியான பல புதிய பொருளாதாரத் தடைகளை டிரம்ப் விதித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>