அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம்

Share

பிரஸ்ஸல்ஸ் நாட்டில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை அமைச்சர்களுக்கான உயர்மட்ட அளவிலான கூட்டம் நடந்தது. இதில் உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. அமெரிக்கா சார்பில் அதன் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவர் நேட்டோ நட்பு நாடுகளின் அமைச்சர்களின் முன்னிலையில் பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டார். ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக சேர்ந்து, ரஷியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து பேசினார்.

இதேபோன்று அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களை ஐரோப்பிய நாடுகள் கொள்முதல் செய்யவுள்ளன என்றும் குறிப்பிட்டார். இந்த நிலையில், நேட்டோ பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பினார். அப்போது, அவர் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முக்கிய பகுதியான முன்பக்க ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, விமானம் உடனடியாக இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இதனை அமெரிக்கா ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகனை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சீன் பார்னெல் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். இதில், விமானத்தில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்சேத் உள்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்து உள்ளார். 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>