அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம்!

Share

கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற பிரதேச செயலாளர் T முகுந்தன் அமைச்சரை வரவேற்றார். தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் கூட்டம் ஆரம்பமானது.

குறித்த கூட்டத்தின் தலைமை உரையை அமைச்சர் நிகழ்த்தியதை தொடர்ந்து திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

அரசினால் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 80 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு 47 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்கலாக 60 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அன்றைய தினம் அனுமதிக்காக மும்மொழியப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர்கள், கிராம மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>