அம்பத்தூர் தூய்மை பணியாளர் ஊதிய முறைகேடு தொடர்பாக ஆணையரிடம் கராத்தே தியாகராஜன் புகார் அளித்தார்

Share

அம்பத்தூர் தூய்மை பணியாளர் ஊதிய முறைகேடு தொடர்பாக ஆணையரிடம் கராத்தே தியாகராஜன் புகார் அளித்தார். சென்னை மாநகராட்சியில் 7-வது மண்டலம் அம்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்து ஊதியம் வழங்கியதில் முறைகேடு உள்ளதாக கடந்த 2025-ம் ஆண்டு புகார் எழுந்தது. இதை விசாரிக்க கோரி பா.ஜ.க. மாநில செயலாளரும் முன்னாள் மேயருமான கராத்தே ஆர். தியாகராஜன் மனு அளித்திருந்தார். இதையடுத்து அப்போதைய மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கடந்த வருடம் நவம்பர் 25-ந்தேதி அதிகாரிகள் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். அந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை ஆணையரிடம் கடந்த மே மாதம் 8-ந்தேதி தாக்கல் செய்தனர். ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் வெளியிடாமல் இருந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை தற்போது கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாரணை குழு அறிக்கையில் சம்பந்தப்பட்ட மண்டல தலைவர், பொறியாளர் மற்றும் குறிப்பிட்ட சங்கத்தின் தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குழுவில் இருந்த மத்திய முதுநிலை வருவாய் அலுவலர், விழிப்பு அலுவலர், உதவி ஆணையர், வட்டார துணை ஆணையர் ஆகியோர் ஆணையருக்கு பரிந்துரைத்து கையொப்பமிட்டுள்ளனர். முறைகேடுகளை நிரூபிக்கும் வருகை பதிவேடு வங்கிகணக்கு எண்களும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளன.

இதையடுத்து பா.ஜ.க. மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் ரிப்பன் கட்டிட வளாகத்தில் மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து புகார் அளித்தார். அந்த புகார மனுவில் விசாரணைக் குழு அனைத்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து ஆணையரிடம் அறிக்கை அளித்தது. ஆனால், அதன்பின்னர் த.வெ.க. அரசு, மண்டல அலுவலரை பதவி உயர்வு செய்துள்ளது. எனவே, மஸ்டர் ரோல் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7-வது மண்டல தி.மு.க. தலைவர், முன்னாள் மண்டல அலுவலர் மற்றும் யூனியன் தலைவர் ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். புகார் மனுவுடன் அம்பத்தூர் மண்டலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் எல்யூஎம் பணியாளர்கள் ஊதிய புகார் தொடர்பான விசாரணை குழு அறிக்கை நகல் இணைத்து இருந்தார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கராத்தே தியாகராஜனிடம் ஆணையர் தெரிவித்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>