அம்பாறை மாவட்டம்-பொத்துவில் பிரதேச கோமாரி கிராமத்தில் ‘சர்வதேச சிறுவர் தின விழா’ வெகு விமர்சையாகக் கொண்டாடப்பெற்றது!

Share

​அம்பாறை மாவட்டம்-பொத்துவில் – கோமாரி கிராமத்தில் “உதவும் பொற்கரங்கள் அமைப்பு – கனடா” அமைப்பின் ஏற்பாட்டில், “சிரிப்பால் சிறகு விரி, சிந்தனையால் உலகை வெற்றிகொள்” எனும் தொனிப்பொருளில் ‘சர்வதேச சிறுவர் தின விழா’ மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது.

​இவ்விழாவானது கனடாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் ‘உதவும் பொற்கரங்கள் அமைப்பு’ நிறுவனர். விசு கணபதிப்பிள்ளை அவர்களின் முயற்சியிலும், கனடா உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியரும் “நட்பின் நாயகன், சமூக ஜோதி” நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் நிதி அனுசரணையிலும் சிறப்பாக இடம்பெற சாத்தியமானது.

​இக்கொண்டாட்ட நிகழ்வில் அப்பகுதியின் மாலைநேர வகுப்புச் சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்குச் சிறப்புப் பரிசுகளும் சிற்றூண்டிகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

​நிகழ்வின் இறுதியில், இத்தகைய நற்செயல்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் சமூக சேவையாளர் கனடா- விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், நிதி அனுசரணை வழங்கிய நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் மற்றும் நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த உதவும் பொற்கரங்கள் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் திரு. சௌவியதாசன் உள்ளிட்ட அனைவருக்கும் மாலைநேர வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. இங்கே காணப்படும் படங்கள் அன்றை சிறுவர் தின விழா வைபவத்தில் எடுக்கப்பெற்றவையாகும்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>