அரசியலில் படுதோல்வியடைந்த சஜித் பிரேமதாச தனது அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற் தொழிலை ஆதரிக்கிறார் என அன்னராசா குற்றச்சாட்டு!

Share

அனுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் தனது அரசியல் பயணத்தில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர் அன்னலிங்கம் அன்னராசா குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த விடயம் தொடர்பாக 10ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்றையதினம் அவரை தொடர்புகொண்டு வினவும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கம் சட்டவிரோத கரைவலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமையை வரவேற்பதோடு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் செயற்பாட்டுக்கு எனது கண்டனத்தையும் தெரிவிக்கிறேன்.

கடந்த வாரம் சட்டவிரோத கரைவலையை நிறுத்தியமைக்கு எதிராக ஜனாதிபதி செயலகம் முன் போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற சஜித் பிரேமதாச முறையற்ற சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டமையை வடபகுதியை மீனவர்கள் சார்பில் கண்டிக்கின்றோம்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடபகுதி கடலில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை நடத்த வேண்டும் என வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வருகை தந்த சஜித் பிரேமதாசாவிடம் பாரம்பரிய மீனவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி முறைகளை தடை செய்ய வேண்டும் அதனை பாராளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம்.

ஆனால் சஜித் பிரேமதாச கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு முன் இடம் பெற்ற சட்டவிரோத மீன்பிடியை தடை செய்தமைக்கு ஆதரவாக கலந்து கொண்டமை அவரின் பங்கு ரோத்து அரசியலை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் மாறி மாறி வந்த அரசாங்கங்களிடம் வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு பல்வேறு சந்தர்பங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு முறையை மட்டும் தடை செய்திருக்கிறார்கள்.

ஆனால் இது போதாது கடலில் சட்டவிரோத அனைத்து மீன்பிடி முறைகளும் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது மீனவர்களை எதிர்பார்ப்பும் கோரிக்கையாகவும் உள்ளது.

ஆகவே தனது அரசியல் இருப்புக்காக தனது அரசியல் பயணத்தில் தோல்விகளையெ தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் சஜித் பிரேமதாச சட்ட விரோத மீன்பிடி முறைகளை ஊக்குவிக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>