அரசியலை அரசியலாகவே சந்திப்போமென முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

Share

அரசியலை அரசியலாகவே சந்திப்போமென முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டியில் கூறினார்.  முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூரில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாங்கள் அரசியலை அரசியலாக சந்திப்போம். ஓடுவது, ஒளிவது, பதுங்குவது என்பது தி.மு.க.வினர் பழக்கம் கிடையாது. 2016-ம் ஆண்டு முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குயில் இதயம் தொடர்பாக சிகிச்சை பெற்று வருகிறேன். கடந்த 2023-ம் ஆண்டில் இரண்டாவது முறையாக தொடர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றேன். ஜூன் 25-ம் தேதி சிங்கப்பூர் செல்வதாக இருந்தது. அப்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் என் வீட்டிற்கு சோதனைக்கு வந்தனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் நான் சிங்கப்பூர் சென்று வருவதற்கான டிக்கெட்டைக் காண்பித்தேன். தேவையான ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதி கூறினேன். நான் சிகிச்சை பெற்றதற்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளது. அவற்றை காண்பிக்க தயார். ஜூலை 3ம் தேதி ஆஜராகும்படி எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு மரியாதை அளித்து என்னால் வர முடியாததற்கான காரணத்தை விவரித்து கடிதம் எழுதியுள்ளேன். நான் மருத்துவத்துக்காக தான் சிங்கப்பூர் சென்றேனே ஒழிய, சுற்றுலாவுக்காக செல்லவில்லை. விசாரணைக்காக ஒத்துழைக்கிறேன் எனக்கூறிய பின்னும், ஓடுகிறேன், ஒளிகிறேன் என கூறுகின்றனர் என தெரிவித்தார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>