தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, இன்று சட்டசபைக்கூட்டமும் நடைபெற்றது. இதில் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். சட்டசபை கூட்டம் முடிந்ததும் தலைமை செயலகத்தில் இருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டைக்கு முதல்-அமைச்சர் விஜய் சென்றார். இந்நிலையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று முதல்-அமைச்சர் விஜய் சந்தித்தார். மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய் அவரை சந்தித்தார். முதல் -அமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் மு.க.ஸ்டாலினை விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். தமிழக அரசியலில் இந்த நடைமுறை ஒரு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழ்நாடு முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என தெரிவித்தார்.
அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் விஜய் – மு.க.ஸ்டாலின் பதிவு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>