அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

Share

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மிகப்பெரிய அளவில் நடந்த இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லமும் குறிவைத்து தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறார். வங்காளதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இடைக்கால அரசு ஷேக் ஹசீனா மீது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் செய்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த குற்றசாட்டினை ஷேக் ஹசீனா மறுத்து வந்தார். இந்நிலையில், ஷேக் ஹசீனா மீதான வழக்கில் டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் ரீதியான தீர்ப்பு என ஷேக் ஹசீனா பரபரப்பு குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “எனக்கு எதிரான இந்த தீர்ப்பு, ஜனநாயகமற்ற, தேர்ந்தெடுக்கப்படாத அரசால் நிறுவப்பட்ட ஒரு மோசடியான தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாரபட்சமானவை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என கூறினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>