அராலி கடலில் இருந்து மீனவரான குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

Share

அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் 9ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை வேறு மீனவர்கள் அவதானித்தனர்.

பின்னர் இது குறித்து உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளனர்.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>