‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சூர்யா வெளியிட்டார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகவும் எமோஷனலாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலைக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வாழ்வியலையும், அங்குள்ள குழந்தைகளின் கல்வி உரிமையையும் பேசும் படமாக ‘அருள்வான்’ அமைந்துள்ளது. முன்னோட்டத்தில், ஒரு துணிச்சலான இளம் பழங்குடிப்பெண், தன் மக்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரை தேடி வருகிறாள். அவளது கோரிக்கையை ஏற்று, அந்த மலைக்கிராமத்திற்கு கல்வி கொண்டு சேர்க்கப் போராடும் நேர்மையான ஆட்சியர் கதாபாத்திரத்தில் அருள்நிதி நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் அந்த கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். முன்னோட்டத்தில் வரும், “நம்ம குடியில ஒருத்தன் படிச்சிருந்தா கூட நம்மள நம்ம சொந்த மண்ணை விட்டு துரத்திருக்க மாட்டாங்க” என்ற வசனம் படத்தின் ஆழத்தை உணர்த்துகிறது. ‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
‘அருள்வான்’ படத்தின் முன்னோட்டத்தை நடிகர் சூர்யா வெளியிட்டார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>