இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்த “ஒன்ஸ் மோர்” படம் ஆகஸ்ட் 28ந் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ போன்ற படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ், பின்னர் ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது அவர், நடிகை அதிதி ஷங்கர் ஜோடியாக ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான படத்தின் முதல்காட்சி பதாகை மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், படத்தின் வெளியீடு தேதி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், ‘ஒன்ஸ் மோர்’ படம் ஆகஸ்ட் 28 ந் தேதி திரையங்குகளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.