அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ‘கான் சிட்டி’ திரைப்படம் வரும் 24ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது. மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ் . அதன் பிறகு கதாநாயகனாக உருவெடுத்த அவர், அநீதி, ரசவாதி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் பணியாற்றி வருகிறார். ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான்சிட்டி’ திரைப்படம் கடந்த ஜூன் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் வடிவுக்கரசி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைத்திருந்தார். படத்தில் இடம் பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் கை கொடுத்ததால் வரவேற்பு கிடைத்தது. ஏமாற்றாதே, ஏமாறாதே கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரூ. 6 கோடி வரை வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கான் சிட்டி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்துள்ளது இந்நிலையில், ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன் தாஸ் நடித்த ‘கான் சிட்டி’ திரைப்படம் ஜூலை 24ம் தேதி ஓடிடி வெளியாகிறது
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>