அர்ஜூன் பிரபாகரன் நடிக்கும் திரைப்படம் “பேட்டில்”

Share

எலிடி டாக்கீஸ் தயாரிப்பில், நாராயணன் பி.ஏ இயக்கத்தில், அர்ஜூன் பிரபாகரன், ஆராத்யா, சுப்ரமணியம் சிவா, காயத்ரி, சுருளி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பேட்டில்”. மேடை பாடகரான அர்ஜூன் பிரபாகரன், ஒரு தனியாரின் உயர்நிலைப் பாடசாலை ஆசிரியை ஆராத்யாவை காதலிக்கிறார். அப்பாடசாலையின் தாளார் சுப்பிரமணியம் சிவா அதிகளவு கல்விக் கட்டணம் வசூலிக்கிறார். ஆனால் மிகக் குறைந்தளவு ஆசிரியர்களை வேலைக்கு வைத்து அதிக வகுப்புகளை நடத்தச் சொல்கிறார். இதனால் ஆசிரியைகள் உடலாலும் மனதளவிலும் மிகுந்த சோர்வடைகிறார்கள். அதனால் மாணவிகளும் கல்வித்தரத்தில் பாதிக்கிறார்கள். இந்நிலையில் மேடைப்பாடகரான அர்ஜூன் பிரபாகரன் உலகளவில் ரசிகர்களை கொண்ட உச்சநிலை பாடகராக வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறார். அவரிடம்  தான் வேலைபார்க்கும் பாடசாலையின் மோசடிகளைக் குறித்து தான் எழுதிய பாடலை பாடச் சொல்கிறார் காதலி ஆராத்யா. முதலில் பாட சம்மதித்த அர்ஜூன் பிரபாகரன், பிறகு பாடவராமல் தட்டிக்கழிக்கிறார். ஏன் தட்டிக்கழிக்கிறார்? தட்டிக்கழிக்கும் பின்னணி என்ன என்பதை விளக்குவதுதான் இப்படத்தின் கதை. பாடகராக வரும் அர்ஜூன் பிரபாகரன் கதாநாயகனுக்குறிய எந்த சினிமாத்தனமும் இல்லாமல் சாதாரணமாக வந்து இயல்பாக நடித்திருக்கிறார். காதல் உணர்வையும் ஆத்திரத்தின் விரக்தியையும் அழகாக பிரதிபலிதிருக்கிறார். ஆராத்யா தன் கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போய்விட்டார். அளவான நடிப்பும் அதிகமான உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடித்துள்ளார். தனியார் பள்ளி தாளாளராக நடித்துள்ள இயக்குனர் சுப்ரமணியம்சிவாவின் கதாபாத்திரம் அதகளவு மிரட்டுகிறது. அதில் அதிகளவு சினிமாத்தனமும் வெளிப்படுகிறது. முனிஷ்காந்தின் அரசியல் நகைச்சுவை படத்துக்கு பக்கபலமாக இருக்கிறது. அரசியல்வாதியின் குணாதிசயங்களை திரையில் அப்படியே காட்டியுள்ளார் இயக்குநர். தனியார் பாடசாலைகளின் முதலாளிகளின் முகமூடியை கிழிதெறிந்த இயக்குநர் நாராயணின் துணிச்சலை பாராட்ட வேண்டும்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>