பு.கஜிந்தன்
அ.அருள்பாயஸ்ஸின் இறுதி ஊர்வலத்தில் கலந்து சிலர் வீதியில் நின்ற பொலிஸாரை நோக்கி மண்ணை அள்ளி வாரி இறைத்து திட்டித் தீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அ.அருள்பாயஸ்ஸின் இறுதிச் சடங்கு 12ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
பின்னர் இறுதி ஊர்வலம் இடம்பெற்றவேளை மாவடி சந்தியில் பொலிஸாருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.
பின்னர் ஊர்வலம் சக்கரத்தை சந்தியை அடைந்ததும் அங்கிருந்த பொலிஸாருக்கும், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் இடையே மீண்டும் முறுகல் ஏற்பட்டது.
இதன்போது அதில் இருந்த சிலர் வீதியில் இருந்த மண்ணை அள்ளி பொலிஸாரை திட்டி தீர்த்தவாறு, அவர்களுக்கு முன் வீசி எறிந்த சம்பவம் இடம்பெற்றது. அதன்பின்னர் ஊர்வலம் மயானத்தை நோக்கி நகர்ந்தது.