“அவதார்: பயர் அண்ட் ஆஷ்” படம் ரூ. 100 கோடி வசூல்

Share

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ என்ற பெயரில் வெளியானது. தற்போது அதன் 3-ம் பாகம் உருவாகி உள்ளது. இதற்கு ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், “அவதார்: பயர் அண்ட் ஆஷ்” படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை முன்பதிவில் மட்டும் உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ. 10 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>