ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது. அவதார் படத்தின் மூன்றாம் பாகமான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இப்படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்நிலையில், ஜேம் கேமரூனின் ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 3,000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் ரூ 800 கோடி வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இதன் வசூல் மேலும் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“அவதார் 3” படம் 3 நாளில் ரூ. 3,000 கோடி வசூல்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>