அஹிம்சை வழியில் போராடி தன் உயிரைத் துறந்த தியாகி தீலீபனை இலங்கை இந்திய அரசுகள் தொடர்ந்தும் புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது!

Share

யாழ்ப்பாணத்தில் திலிபன் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து ஒன்றாரியோ மாகாண உறுப்பினர் லோகன் கணபதி விடுத்துள்ள அறிக்கை!

1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது ஆயுதங்களை ஒப்படைத்தது. ஆனால், ஈழத் தமிழரின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாததால், விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த இருந்த திலீபன் என்னும் இராசையா பார்த்தீபன்) அவற்றை தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக அஹிமசை வழியில் போராடத் தீர்மானித்தார்

1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் திகதி அன்று, இந்திய அரசுக்கு திலீபன் ஐந்து அம்சக் கோரிக்கைைகளை ஜனநாயக முறையில் முன்வைத்தார் நல்லூர் கந்தசுவாமி கோவில் வீதியில் அமைக்கப்பெற்ற ஒரு பந்தலில் நீராகாரம் கூட அருந்தாது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்கதத் தொடங்கினார். பின்னர் இந்திய அரசோ அன்றி தமிழ்நாட்டு அரசோ திலிபனின் கோரிக்கைகளையோ அன்றி அவரது தியாக வேள்வியின் உன்னத்தையோ அறியாமல் அவற்றைப் புறக்கணித்து செயற்பட்டன. எனவே இறுதியில் அஹிம்சை வழியில் போராடி தன் உயிரைத் துறந்த தியாகி தீலீபன் தனது தலைவனான பிரபாகரன் அவர்களின் வேண்டுகோளைக் கூட நிராகரித்து தன் உயிரை எமது மக்களுக்காகவும் தமிழ்த் தேசத்திற்காகவும் அர்ப்பணித்தார். எனினும் இந்த தியாகத்தைக்கூட புரிந்து கொள்ளாமல் இலங்கை இந்திய அரசுகள் தொடர்ந்தும் புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது!

இவ்வாறு டயாழ்ப்பாணத்தில் திலிபன் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து ஒன்றாரியோ மாகாண உறுப்பினர் லோகன் கணபதி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் காணப்பெறும் இரு பக்க அறிகையை வாசகர்கள் வாசித்து அறிந்து கொள்ளும் பதிவேற்றம் செய்யப்பெற்றுள்ளது

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>