ஆங் சான் சூகி விடுதலை கோரிக்கையை மியான்மர் அரசு நிராகரித்துள்ளது. மியான்மரில் 2021-ல் ராணுவப் புரட்சி மூலம் மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது முதல் அரசியல் கொந்தளிப்பு நீடிக்கிறது. பெண் தலைவர் ஆங் சான் சூகி (வயது 81) சிறைபிடிக்கப்பட்டதால் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. இதற்கிடையே, வீட்டுக்காவலில் உள்ள சூகியைச் செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதி சமீபத்தில் சந்தித்தார். இதனை வரவேற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ‘ஆசியான்’ கூட்டமைப்பு, சூகியை நிபந்தனையின்றி முழுமையாக விடுதலை செய்ய வலியுறுத்தியது.
ஆனால், இக்கோரிக்கையை மியான்மர் ராணுவ அரசு அதிரடியாக நிராகரித்துள்ளது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>