ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய இலங்கை தமிழரசு கட்சி!

Share

இலங்கை தமிழரசு கட்சியானது உள்ளூராட்சி சபையில் ஆட்சி அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியிடம் ஆதரவு கோரிய விடயம் அம்பலமாகியுள்ளது.

மானிப்பாய் பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக இவ்வாறு ஆதரவு கோரியமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினரான திரு.ஜெசீதன், மானிப்பாய் பிரதேச சபையின் NPP உறுப்பினர் ஒருவரிடம் இவ்வாறு ஆதரவு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் கட்சியின் உயர்மட்ட குழுவின் தீர்மானத்துக்கு அமையவே ஆதரவு வழங்குவதா இல்லையா என முடிவு எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர், தமிழரசு கட்சியின் உறுப்பினரானஜெசீதனிடம் கூறியதாக அறிய முடிகிறது.

இலங்கை தமிழரசு கட்சியானது பதவிக்காக எந்த அளவுக்கும் செல்வதற்கு தயாராகிய விடயம் தற்போது புலப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>