ஆண்டுகள் எத்தனை கடந்தாலும் என்றும் எம் அருகினில் நீயிருப்பாய் பவானே! | திரு. சத்தியபவான் சத்தியசீலன் (பவான்)

Share

சுருவில் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவில் வசித்து வந்தவருமான
திரு. சத்தியபவான் சத்தியசீலன் (பவான்)
அவர்களின் 8ம் ஆண்டு நினைவாஞ்சலி.

(தமிழ்வண் தொலைக்காட்சி படப்பிடிப்பாளரும், தொழில்நுட்பக் கலைஞரும்)

‘ஐயுணர் வெய்தியக் கணணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு’

உண்மையை உணரும் மெய்யறி வில்லாதவர்க்கு
ஐம்புலன்களால் பெற்ற அறிவினால் என்னபயன்…

எங்கள் மீது அளவு கடந்த
பாசத்தைப் பொழிந்தவனே
ஆண்டு எட்டு ஓடி மறைந்தாலும்
நினைவுகள் ஒருநாளும்
எம்மை விட்டு மறையாது
வைகுந்தா!!! வைகுந்தா
என்று அடிக்கடி கூறும் நீ
வைகுந்தமே சென்று விட்டாய்!!

சுத்த வெள்ளைச் சேட்டும், சந்தனப்பொட்டும்
நிமிர்ந்த நடையுடைய ஆண் அழகன்
எந்நேரமும் எம்முன் உன் உருவம்
கனவில் உன்னை காண்கின்றோம்
கண்டவுடன் களிப்படைகின்றோம்…
உன் நாமத்தை உச்சரிக்கின்றோம்
பொறுமையாய் உன் வாழ்வை மௌனித்ததால்
பூமித்தாயும், உன்தாயும் மௌனமாய்
உன்னை அழைத்தனரோ!

உயர்வான உன் உள்ளத்தால் சீருடனும்
சிறப்புடனும் சென்றாயோ

என்றும் உன் நினைவோடு வாழும் குடும்பத்தினர்

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>