அதிமுகவில் இருந்து கடம்பூர் ராஜு உட்பட மேலும் சிலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக பற்றியும் தவெக பற்றியும் பேசியுள்ளது வைரலாகி வருகின்றது. அதிமுக தான் தவெகவிற்கு தாய் கழகம். அதிமுகவிற்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. எடப்பாடி பழனிசாமி என கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிற்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கிரிஷ்ணகிரியில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: அரசியல் நாகரிகம் என்று ஒன்று உள்ளது. தான்தோன்றித்தனமாக ஆதவ் அர்ஜுனா பேசக்கூடாது. அதிமுக பொதுச் செயலாளர் பற்றி பேச, பல கட்சிகளுக்கு சென்று வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. அதிமுகவுக்கு துரோகம் புரிந்து சென்ற சந்தர்ப்பவாதிகளை வரவேற்பதோடு ஆதவ் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற பேச்சை நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு நாவடக்கம் தேவையென கே.பி.முனுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>