ஆந்திராவில் கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார். பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திர அரசு சார்பில் அம்மாநில மந்திரிகள் முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் வரவேற்றனர். பின்னர் விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு காரில் சென்றார். கோவிலுக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு செண்டை மேளம் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலுக்குள் சென்ற முதல்-அமைச்சர் விஜய் கனகதுர்கை அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விஜய் வருகை மற்றும் தசரா திருவிழா என கனதுர்கை அம்மன் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
ஆந்திராவில் கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>