ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – மக்கள் பீதி

Share

ஆப்கானிஸ்தானில் அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக, நேற்று ரிக்டர் 4.1, 5.8, 4.5, 4.8 அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் ஆப்கானிஸ்தானில் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாக வில்லை. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>