ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – 8 பேர் உயிரிழப்பு

Share

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் 48 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டது. எனினும், சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்துவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதில் 3 பேர் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆவர். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியிருப்பதாவது: “நட்புறவான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பக்டிகா மாகாணத்தில் உள்ள உர்குனில் இருந்து ஷரானாவுக்கு வீரர்கள் பயணம் செய்தனர். பின்னர் உர்குனுக்கு திரும்பிய பிறகு, அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கோழைத்தனமான இந்த தாக்குதலை நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>