ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை… இயக்குநர் செல்வராகவன்

Share

இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் செல்வராகவன் மென்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலணி 2 படங்களை இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்த சமீபத்திய பேட்டியில் தான் இயக்கும் புதிய படங்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், “புதுப்பேட்டை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாவது என் கையில் இல்லை. இந்தப் படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால், அது எளிமையானது தான்.” “7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் திரைப்படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரும். இதுதவிர புதிதாக கதை ஒன்றை எழுதி வருகிறேன்,” என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>