ஆரியின் “பகவான்” படத்தின் முன்னோட்டம் வெளியானது

Share

புராண கால வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘பக​வான்’. மித்​தாலஜிகல் திரில்​ல​ராக உரு​வாகி​யுள்ள இப்படத்தை சு.​காளிங்​கன் இயக்​கி​யுள்​ளார். அம்​மன்யா மூவிஸ் நிறு​வனம் சார்​பில் சி.​வி. மஞ்​சு​நாதா தயாரித்துள்ள இதில் ஆரி அர்​ஜுனன், பூஜிதா பொன்​னா​டா, ஜேம்ஸ் பார்​ரெட், சந்​தோஷ் பிர​தாப், யோக் ஜேபி, ஆடு​களம் முருக​தாஸ் என பலர் நடித்​துள்​ளனர். முரு​கன் சரவணன் ஒளிப்பதிவு செய்​துள்ள இப்​படத்​தின் பாடல்​களுக்கு ப்ரசன் பாலாவும் பின்​னணிக்கு யுவ​ராஜும் இசை அமைத்​துள்​ளனர். படம் குறித்து இயக்​குநர் காளிங்​கன் “இந்​தப் பிரபஞ்சத்​தில் புரி​யாத பல விஷ​யங்​கள் இருக்​கின்​றன. எல்லோரும் பகவானை வணங்​கு​கிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர் பகவான் என்​றால், அவர் யார்? அவர் வெறும் உருவமா ? இல்லை வேறெது​வு​மா ? அப்​படி​யெனில் இல்லுமினாட்டி யார் ? இந்த கேள்வி​களுக்​கான பதில் தான் இப்படத்​தின் மையம். ஒரு சாதாரண கதை​யாக இல்​லாமல், பார்வையாளர்​களுக்கு புதிய அனுபவத்தை அளிக்​கும் வித​மாக இப்​படம் உரு​வாகி​யுள்​ளது. நாம் அறிந்த மகா​பாரத கதை​யின் ஒரு பகு​தி​யும் இதில் வரும். இதில் ரசிகர்​களுக்​குப் பல ஆச்​சரி​யங்​கள் காத்​திருக்​கிறது. நாம் பொது​வாகக் கவனிக்​காமல் இருக்​கும் சா​தாரண உயி​ரின​மான பல்லி முக்​கிய கதா​பாத்​திர​மாக இடம்​பெறுகிறது. படத்​தின்​ இறுதிக் ​கட்​ட பணி​கள்​ தற்​போது நடந்​து வருகிறது”. இந்நிலையில், ஆரி அர்ஜுனனின் ‘பக​வான்’படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>