தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். ‘நெடுஞ்சாலை’, ‘தரணி’, ‘மாயா’, ‘உன்னோடு கா’, ‘முப்பரிமாணம்’, ‘நாகேஷ் திரையரங்கம்’, ‘நெஞ்சுக்கு நீதி’, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மேலும் பிரபலமானார். விஜய் மில்டன் இயக்கத்தில் ‘கோலிசோடா 3’ படத்தில் நடித்துள்ளார். மனோ கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ராஜா தயாரிப்பில், எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம்‘போர்த் ப்ளோர்’.சென்னையின் மையப்பகுதி ஒன்றில், ஒரு குடியிருப்பில் நடக்கும் பரபரப்பான சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், ஆச்சரியப்பட வைக்கும் திருப்பங்களுடன், இதுவரை பார்த்திராத திரில்லர் அனுபவத்தை தரும் வகையில், இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குநர் சுந்தரபாண்டி. சைக்கலாஜிகல் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படம், கனவுகளுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பினை எதார்த்தமாக சொல்லுகிறது. இப்படத்தில் நாயகனாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். தீப்ஷிகா நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.”போடா போடி” படப்புகழ் இசையமைப்பாளர் தரண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். போடா போடி, வெண்ணிலா கபடி குழு படங்களின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், ஆரி அர்ஜுனன் நடித்துள்ள ‘போர்த் ப்ளோர்’ படம் பிப்ரவரி 27ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தணிக்கை வாரியம் இப்படத்திற்க்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஆரி அர்ஜூன் நடிக்கும் “போர்த் ப்ளோர்” படம் 27ம் தேதி வெளியீடு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>