நடிகர் ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவர் தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், அடுத்ததாக ‘மிஸ்டர் எக்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆக்சன் திரில்லர் கதையாக உருவான இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், மஞ்சு வாரியர், அனேகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>