ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அப்பகுதிக்கு நேற்று காலை 10 காவல்துறை விசாரணை நடத்த சென்றனர். பொரிபன்ஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு விசாரணைக்கு சென்றபோது அங்கிருந்த நபர் காவல்துறை மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு போலீஸ்காரர் படுகாயமடைந்தார். இதையடுத்து படுகாயமடைந்த காவலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய நபர் தப்பியோடிய நிலையில் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு நடத்திய நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு – 2 காவலர்கள் உயிரிழப்பு
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>