ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 12 பேர் படுகாயம் – முதியவர் கைது

Share

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரம் சிட்னி. அங்குள்ள பரபரப்பான ஒரு தெருவில் மக்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சரமாரி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் அங்கிருந்த பேருந்து நிலைய கண்ணாடி உடைந்தது. இதனை கண்டதும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 12 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அங்கு விரைந்த காவல்துறை அந்த முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>