இங்கிலாந்தின் Ratnam Foundation அனுசரனையில் நடைபெற்ற அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் சதுரங்கச் சுற்றுப்போட்டி

Share
அராலி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் 86ம் ஆம் ஆண்டு விழாவினை முன்னிட்டு இங்கிலாந்தின் Ratnam Foundation பூரண அனுசரனையில் சதுரங்கச் சுற்றுப்போட்டி 13.04.2026 அன்று அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் இடம் பெற்றது.
இப் போட்டியில் 65 மாணவர்கள் பங்குபற்றி பரிசுகளைப்  பெற்றுக் கொண்டனர். இச் சதுரங்கச் சுற்றுப்போட்டியானது மாணவர்களின் நினைவாற்றல், சிந்தனைத் திறன் முடிவு எடுக்கும் திறன் ஆகிய பண்புகளை வளர்த்தெடுப்பதுடன் இளைய சமுதாயம் தீயபழக்கவழக்கம், போதைப்பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில் இருந்து விடுபடுவதற்கு உறுதுணையாக அமைகின்றது.
இவ் சதுரங்கச் சுற்றுப்போட்டியின் மூலம் ஒழுக்கம் மிக்க மாணவ சமூதாயத்தினை உருவாக்குவதுடன் நாட்டில் நற்பிரஜையாக வாழ்வதற்கும் இவ்வாறான போட்டிகள் பெரிதும் துணைபுரிகின்றது. தொடர்ந்தும் வருடா வருடம் இப் போட்டி நடாத்துவதற்கு அனுசரனை வழங்க Rantnam Foundation நிறுவனத்தினர் சம்மதித்துள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>