மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த நிலையில் மகாத்மா காந்தியின் ஓவியம் ஏலம் விடப்பட்டது. போன்ஹாம்ஸில் நடந்த ஆன்லைன் ஏலத்தில் காந்தி ஓவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை ஆனது. நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் 3 மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் ஓவியருக்கு போஸ் கொடுத்தது இந்த நிகழ்வு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>