இடைத்தேர்தல் வெற்றியால் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமென ரங்கசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது: இந்த வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்கள் ஆட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். வாக்கு அளித்த
தட்டாஞ்சாவடி தொகுதி வாக்காளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய எம்.எல்.ஏ., தொகுதியின் மேம்பாட்டிற்காகச் சிறந்த முறையில் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர் செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>