“இதயம் முரளி” திரைப்படம் 3 நாளில் ரூ. 10 கோடி வசூலித்தது

Share

இதயம் முரளி’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அதர்வாவுடன் இணைந்து நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

காதல், நகைச்சுவை, எமோஷனல் காட்சிகளால் இப்படத்தின் கதை உருவாகியிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இப்படத்திற்கு டிக்கெட் விற்பனைகள் கணிசமாக அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், ‘இதயம் முரளி’ படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 10 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதர்வாவின் படங்களிலேயே பெரியளவில் டிக்கெட்கள் விற்பனையான படமாக ‘இதயம் முரளி’ மாறியுள்ளது. படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகம் உள்ளதால், படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>