ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘டிராகன்’ படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கயாடு லோஹர் . தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார். ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களமிறங்குகிறார் தமன். ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு முழுமையாக இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தமன். ஆனால், இதில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில், ‘இதயம் முரளி’படத்தின் பின்னணி பணிகளை நடிகர் அதர்வா நிறைவு செய்துள்ளதாக படக்குழு காணொளி வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.
“இதயம் முரளி” படத்தின் பின்னணி குரல் பணியை நிறைவு செய்த அதர்வா
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>