இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் – மாநிலங்களவையில் கார்கே கோரிக்கை

Share

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா விளைகுடா நாடுகளில் இருந்துதான் அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது.

இதனால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சான்றாக சமையல் எரிவாயு தோம்பு விலை 60 ரூபாய், வணிக எரிவாயு தோம்பு விலை ரூ. 115-ம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு குறித்து மாநிலங்களவையில் குறுகிய நேர விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கார்கே வலியுறுத்தியுள்ளார். இந்த மோதலால் இந்தியாவின் பொருளாதார ஸ்திரதன்மை நேரடியாக பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கும் மேலாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களில் சிலரை காணவில்லை. சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செய்தி வருகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருகிறது என கார்கே தெரிவித்தார். இதற்கிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தானாகவே, மத்திய கிழக்கு மோதல் குறித்து அறிக்கை வெளியிட்டார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>