இந்தியாவிலேயே அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் முதல்-அமைச்சர் விஜய்யென அமைச்சர் அருண்ராஜ் பேசினார்

Share

இந்தியாவிலேயே அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் முதல்-அமைச்சர் விஜய்யென அமைச்சர் அருண்ராஜ் பேசினார். இது தொடர்பாக, தாராபுரம் கூட்டத்தில் அமைச்சர் அருணராஜ் பேசியதாவது; தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மக்கள் செல்வாக்கும் அதிகம் பெற்ற தலைவர் தளபதி. எதிர்க்கட்சிக்காரரர்கள் இந்த மண்ணில் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியுமா? துபாய்க்கு போய் தொழில் செய்யலாமா?. இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி அமைச்சா, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி, குருவி சகுனம் பார்த்தாலும் சரி, தமிழக வெற்றி கழகம் இருக்கும் வரை எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்க போறீங்க.

2026 பொதுத்தேர்தல் முடிவு விபத்து அல்ல. தமிழக மக்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்துள்ளர் என்பதின் வெளிப்பாடு. தமிழக மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களித்திருங்காங்க. அதற்கான சாட்சிதான் 2026 பொதுத்தேர்தல். கொங்கு மண்டலத்தில் 60 இடங்களில் 28 இடங்களை வெற்றி பெற வைத்து தமிழக வெற்றி கழகத்தின் கோட்டை என நிரூபித்துள்ளீர்கள். இந்த கொங்கு மக்களுக்கு என்னுடைய சல்யூட். கொங்கு மக்கள் என்றால் நியாபகத்திற்கு வருவது உண்மை, கடின உழைப்பு, சுயமரியாதை. தற்போது வேதனையான விஷயம் என்றவென்றால் தானும் கொங்கு மண்டலக்காரன் என்று சொல்லிக்கிட்டு, கொங்கு மண்டல பிரதிநிதி என்று சொல்லிக்கிட்டு தலைமை பண்பே இல்லாத ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். கொங்கு மண்டல மக்களின் அடிப்படை பண்புகளுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக குறுக்கு வழியில, பதவி மட்டுமே முக்கியம் என்பதற்காக செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்து கொண்டிருக்காரு. திமுக கூட கூட்டணி வைக்க முயற்சி செய்யலையா? என கொங்கு மக்கள் அவரிடம் சத்தியம் செய்ய கேட்க வேண்டும். கொங்கு மக்கள் என்ன ஆனால் எனக்கென்ன? என்று பொய் சத்தியம் கூட செய்வாரு. அதுதான் ஈபிஎஸ். அவரை ஈபிஎஸ் என்பதை விட கேகேஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும். இடைத்தேர்தலில் திமுக-அதிமுக கூட்டணி என்பதை ஆதாரப்பூர்வமாக கூறுகிறேன். மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு என்று டீலிங் பேசப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>