இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான உறவு “மிகச் சிறப்பாக” உள்ளதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் கூறியுள்ளார்

Share

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான உறவு தற்போது “மிகச் சிறப்பாக” உள்ளதாக நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தற்போது இந்தியாவுடன் நட்புடன் சார்ந்த அணுகுமுறையை நேபாளம் கடைப்பிடித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஆசியா சொசைட்டி நிகழ்ச்சியில் பேசிய ஷிஷிர் கனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சமீபத்தில் சந்தித்ததாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா-நேபாளம் இடையேயான உறவு பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது என்றும், நேபாளத்தின் மொத்த வர்த்தகத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுடனான வர்த்தகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா-நேபாளம் இடையேயான கலாசார மற்றும் சமூக உறவுகள் மிகவும் வலுவாக இருப்பதாகக் கூறிய கனால், அரசியல் ரீதியாக சில நேரங்களில் உறவில் கருத்து வேறுபாடு ஏற்படுவது வழக்கம் என்றார். அதேநேரத்தில், “தற்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகச் சிறப்பாக உள்ளது” என்று அவர் கூறினார். இந்தியா மற்றும் சீனா இடையேயான புவிசார் அரசியலை நேபாளம் எவ்வாறு கையாள்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கனால், அண்டை நாடுகளுடனான உறவுகளை கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் அணுகுவதைவிட, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதாக கூறினார். எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில சவால்கள் அண்டை நாடுகளுடன் இருப்பது இயல்பானது என்று கூறிய அவர், “சவால்கள் எங்கே உள்ளன என்பதை விட, வாய்ப்புகள் எங்கே உள்ளன என்பதில் தற்போது கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>