இந்தியா என்னை 100 சதவீதம் நம்பலாமென அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்

Share

இந்தியா என்னையும் எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம்.  எப்போதாவது உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்புகொள்ளலாம் என்று டிரம்ப் கூறினார்.

 அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழாவை முன்னிட்டு டில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொலைபேசி வாயிலாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசினார். அப்போது டிரம்ப் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி சிறந்த தலைவர்; அவர் என் நண்பர். மோடியின் மிகப் பெரிய ரசிகன். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது. இந்தியா என்னையும் எங்கள் நாட்டையும் 100 சதவீதம் நம்பலாம். எப்போதாவது உதவி தேவைப்பட்டால், எங்களை தொடர்புகொள்ளலாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்கியோ கோர் ஆகியோர் பங்கற்றனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>