இந்தியா – சீனா இடையே அடுத்த மாதம் நேரடி விமான போக்குவரத்து

Share

வரும் 28-ம் தேதி தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

   கொரோனா தொற்று மற்றும் எல்லை பிரச்சினை காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்தை தொடங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியாவின் விமான நிறுவனங்கள் சீனாவுக்கான விமானங்களை இயக்க தயாராக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. வருகிற 28-ம் தேதி சீனாவின் தியான் ஜில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா எடுத்துள்ள வரி விதிப்பு நடவடிக்கையால் இந்தியாவுடன் சீனா நெருக்கம் காட்டி வருகிறது. இந்தநிலையில்தான் இந்தியா – சீனா இடையே நேரடி விமான போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>