அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தியதாக அவர் கூறினார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது, நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா, தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன். இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் ஏற்படுவதை தடுத்து நிறுத்தினேன். நீங்கள் 1 கோடி பேரை காப்பாற்றியதாக பாகிஸ்தான் பிரதமர் என்னிடம் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் போரில் 8 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைன் – ரஷியா போரை மட்டுமே இதுவரை என்னால் நிறுத்த முடியவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>