அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க உளவுத்துறையின் ‘வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள், அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயத்துடனேயே தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இருநாடுகளும் வெளிப்படையான மோதலை விரும்பவில்லை என்றாலும், பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து நெருக்கடிகளுக்கான தூண்டுதல்களை உருவாக்கும் நிலைமைகள் நிலவுகின்றன. அதற்கு பஹல்காம் தாக்குதல் உதாரணமாகும் என்று கூறப்பட்டு உள்ளது. இதேபோல பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவை தாக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. தெற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்த முனைவதாகவும், தலீபான்கள் பாதுகாப்பை பலப்படுத்தி அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் சூழல் – அமெரிக்க உளவுத்துறை தகவல்
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>