இந்தியா மீதான வரி விதிப்பு 25 சதவீதமாக குறைக்கப்படும் – அமெரிக்க அமைச்சர் தகவல்

Share

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீதான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்துள்ளது என்றும் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது: ரஷிய எண்ணெயை வாங்கியதற்காக நாங்கள் இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தோம். தற்போது ரஷிய எண்ணெயை வாங்குவதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் கணிசமாகக் குறைத்துள்ளன. இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் ரஷிய எண்ணெய் கொள்முதல் சரிந்துவிட்டது. அது ஒரு வெற்றியாகும். இந்தியாவின் மீதான வரிகள் இன்னும் அமலில் உள்ளன. அவற்றை நீக்குவதற்கு ஒரு வழி இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>