தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் 5 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி, பவானிசாகர் தொகுதியில் பிஎல் சுந்தரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>