ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு எண்ணெய்பொருட்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதால், இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தப் புதிய வரி வரும் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்தால், மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளை மாளிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்ப் பொருட்கள் கொள்முதலை இந்தியா குறைத்துவிட்டதாகக் கூறப்பட்டது.ஆனால், வழக்கம்போல எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கான வரி மேஉலகின் ஏழை நாடுகள், பிரிக்ஸ் அமைப்பு கூட்டாளிகள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்,” என வரி மூலம் மிரட்டல் விடுக்கும் அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்துள்ளார். இன்னும் வரி விதிக்கப்போவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக, தடைகளும் கட்டுப்பாடுகளும் தற்போதைய வரலாற்று காலகட்டத்தின் வரையறுக்கப்பட்ட அம்சமாக மாறிவிட்டன. இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பாதிக்கிறது. சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கம் வீழ்ந்துவருவதை பொறுக்க முடியாத அமெரிக்கா, ஒரு புதிய காலனித்துவ கொள்கையை பின்பற்றுகிறது. சர்வதேச அரங்கில் சுதந்திரமான பாதையை தேர்வு செய்பவர்களுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை பயன்படுத்துகிறது. ரஷ்ய நட்பு நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பது என்பது, இறையாண்மை மிக்க நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்பது ஆகும். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு சமம். எந்தவொரு வரிப் போர்களோ அல்லது தடைகளோ வரலாற்றின் இயல்பான போக்கைத் தடுக்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குறிப்பாக குளோபல் சவுத் எனப்படும் ஏழை நாடுகள், பிரிக்ஸ் நாடுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. மந்தமான பொருளாதார வளர்ச்சி கொண்ட அமெரிக்காவால், விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளே ஊக்குவித்த தடையற்ற வர்த்தகத்தின் அடிப்படை கொள்கைக்கு மாறாக, அரசியல் ரீதியாக வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.லும் உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், ரஷியாவிடம் இருந்து வாங்கும் எண்ணெயை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு இந்தியா விற்கிறது. உக்ரைன் போரில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்ற கவலை இந்தியாவுக்கு இல்லை. இந்தியாவின் நடவடிக்கைக்காகவே அந்த நாட்டின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவேன்” என்று கூறினார்.
இந்திய பொருட்கள் மீதான வரி மேலும் உயர்த்தப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167"
crossorigin="anonymous"></script>
<ins class="adsbygoogle"
style="display:block; text-align:center;"
data-ad-layout="in-article"
data-ad-format="fluid"
data-ad-client="ca-pub-2268409811114167"
data-ad-slot="7294005735"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>