இந்திய மீனவர்களின் 90 படகுகளை கடலில் மூழ்கடிக்க தீர்மானம்!

Share

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட சுமார் 90 இந்திய மீன்பிடிப் படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வடபகுதி குறிப்பாக யாழ். மாவட்டத்தை சூழவுள்ள கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் நீதிமன்றங்களின் உத்தரவின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 5 வருடங்களாக மயிலிட்டி துறைமுகத்தில் தரித்து நிற்கும் படகுகளில் சில மீள ஒப்படைக்கப்பட்டதுடன் இன்னும் சில இலங்கை மீனவர்களின் தேவைக்காக வழங்கப் பட்டுள்ள நிலையில் எஞ்சியவற்றை புதைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>