இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரை சந்தித்த முதல் – அமைச்சர் விஜய்

Share

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழக முதல்-அமைச்சராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனிடையே, முதல்-அமைச்சராக பொறுப்பேற்றப்பின் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி, நேற்று திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீனை சந்தித்தார். சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய் அக்கட்சி தலைவர் காதர் மொய்தீன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>