இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு- மக்கள் பீதி

Share

இந்தோனேசியாவின் டெர்னேட் அருகிலுள்ள வடக்கு மொலுக்கா கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தையடுத்து உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6.48 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவில் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். கடலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா மட்டுமின்றி பிலிப்பைன்ஸ், மலேசியாவிலும் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் தற்போது வரை கிடைக்கவில்லை. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>