இந்த தேர்தல் விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர் – விஜய் பேச்சு

Share

வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார். இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டில்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார். விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>